நித்தி ஆயோக்

நிதி ஆயோக், புதிய மற்றும் புதுபிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் இந்தியா முதலீடு ஆகியவை இணைந்து சூரிய ஒளி மின்சாரம் உற்பத்திக்கான ஒரு கருத்தரங்கை நடத்தின

Posted On: 07 OCT 2020 2:18PM by PIB Chennai

நிதி ஆயோக், புதிய மற்றும் புதுபிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் இந்தியா முதலீடு ஆகியவை இணைந்து, இந்தியாவில் உலகளாவிய சூரிய ஒளி மின்சாரத்துக்கான வாய்ப்புகள் இருப்பதை அறிவிக்கும் விதமாக சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கான இந்தியா பி.வி எட்ஜ்-2020 என்ற ஒரு கருத்தரங்கை அக்டோபர் 6-ம் தேதி நடத்தின

பொதுவான அமர்வில் உரையாற்றிய புதிய மற்றும் புதுப்பிக்க தக்க எரிசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சகங்களுக்கான (தனிப்பொறுப்பு) மத்திய இணை அமைச்சர் திரு.ஆர்.கே.சிங், “உலக ஆற்றல் திறனில் கூடுதலாக இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் வேகமாக வளர்ந்து வருகிறது. மின்சார தேவை தொடர் வளர்ச்சியை கண்டிருக்கிறது. புதுபிக்கத்தக்க எரிசக்தியானது கணிசமான அளவுக்கு மின்சாரம் வழங்குகிறது. பிரதமர் திரு. நரேந்திரமோடியின் தலைமையின் கீழ், தூய எரிசக்தியை நோக்கி மாற்றம் அடைவதற்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது. 2030-க்குள் புதுப்பிக்கதக்க எரிசக்தி திறனை 450 ஜிகாவாட் நிறுவுதல் என்ற நோக்கத்துக்குக் கூடுதலாக, கிரிட்-இணைப்பு சூரிய ஒளி மின்சாரம் மற்றும் புதுபிக்கத்தக்க எரிசக்திகளில் மட்டும்  இந்தியா திட்டமிடவில்லை, இயக்கம் சார்ந்த ஒரு லட்சியப்பார்வையுடன் மின்சாரம் சார்ந்த சமையலுக்கும் திட்டமிடுகிறது.   ஆத்மநிர்பார் பாரத் என்ற இலக்கை அடைவதற்கான அரசின் நடைமுறைகள் விளைவாக, ஏற்கனவே, 20 ஜிகாவாட் அளவுக்கு ஆர்வம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. செல் உற்பத்தி வழங்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளில் முதலீடு செய்வதில் இந்தியா தொடர்ந்து பெரும் அளவிலும், விரைவாகவும் வளர்ந்து வருகிறதுஎன்றார்.

இந்த நிகழ்வில் சர்வதேச சூரிய ஒளி மின்சார உற்பத்தியாளர்கள், முன்னெடுப்பாளர்கள், முதலீட்டாளர்கள்,சிந்தனையாளர்கள் மற்றும் முன்னணி கொள்கை வகுப்பாளர்களுடன் உலகின் மற்றும் இந்தியாவின் முக்கியமான தலைமை செயல் அதிகாரிகள் 60 பேர் பங்கேற்றனர். சூரிய ஒளி மின்சாரத்துக்கு ஏற்ற முதலீட்டை கொண்டு வருவதற்கான வழிகள் குறித்த விவாத நிகழ்ச்சிக்குப் பின்னர், முதலீட்டாளர்களின் வட்டமேஜை ஆலோசனை ஒருங்கிணைக்கப்பட்டது

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்;  
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662283 

                                                                     ---- 



(Release ID: 1662331) Visitor Counter : 185