வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

1567 சமூதாய/பொதுக்கழிவறைகளை அமைத்து 876 என்ற இலக்கை தாண்டி இமாசலப் பிரதேசம் சாதனை படைத்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 07 OCT 2020 12:38PM by PIB Chennai

வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரத்துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு. துர்கா சங்கர் மிஸ்ரா, கடந்த மாதம் உத்தரகாண்ட், இமாசலப் பிரதேச மாநிலங்களின் தலைமைச் செயலாளர்/முதன்மைச் செயலாளர்/மூத்த அதிகாரிகளுடன் உரையாற்றினார். அப்போது அவர், ஜிஎஃப்சி சான்றிதழ் பெறுவதற்கு நகரங்களை தயார்படுத்துவதற்கு மாநிலங்கள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று வலியுறுத்தினார்.மேலும் அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளும் கழிவறை வசதிகளை முறையாக பராமரிப்பதை நோக்கமாக கொண்டு தங்களது ஓடிஎஃப்+, ஓடிஎஃப்++ தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று மாநிலங்களை அவர் கேட்டுக்கொண்டார். மேலும் 2022-ம்ஆண்டுக்குள் மாநிலத்தின் பாதி அளவு நகரங்கள் 3 நட்சத்திர ஜிஎஃப்சி அந்தஸ்தை பெற முயற்சிக்கவும் வலியுறுத்தினார்.

இந்த உரையாடலின் போது இமாசலப் பிரதேச மாநிலம் 1,567 சமுதாய/பொதுகழிவறைகளைக் கட்டி  876 என்ற இலக்கை தாண்டியது குறித்து தெரிவிக்கப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் 20,750 (75%)தனிப்பட்ட வீட்டு கழிவறை பயன்பாடுகளை கட்டியுள்ளது. 2,611 என்ற இலக்கை தாண்டி 4642 சமுதாய/பொதுக்கழிவறைகள் கட்டியுள்ளது. மாநிலங்கள் தனிப்பட்ட வீட்டுக் கழிவறை பயன்பாடுகளுக்கான இலக்கை விரைவாக அடையும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இமாசலப்பிரதேச மாநிலம் தினமும் 369.46 டன்(98%) கழிவுகளை செயலாக்குவதாக கூறியது. உத்தரகாண்ட் தினமும் உருவாக்கப்படும் கழிவுகளில் 901.45 டன் செயலாக்கப்படுவதாக  கூறியது. மேலாண்மை தகவல் அமைப்பை தொடர்ந்து புதுப்பிப்பதை உறுதி செய்யும்படி மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662260

********

 

(Release ID: 1662260)


(வெளியீட்டு அடையாள எண்: 1662306) வருகையாளர் எண்ணிக்கை : 166
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Telugu