சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
ஜார்க்கண்டில் உள்ள பகூரில் ஜவஹர் நவோதயா வித்யாலயாவுக்கான அடிக்கல்லை திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' முன்னிலையில் மெய்நிகர் முறையில் திரு முக்தர் அப்பாஸ் நக்வி நாட்டினார்
இடுகை இடப்பட்ட நாள்:
06 OCT 2020 6:22PM by PIB Chennai
வரலாற்றிலேயே முதல் முறையாக, பிற்படுத்தப்பட்டோர், நலிவுற்றோர் மற்றும் சிறுபான்மையினர் அதிகமாக உள்ள பகுதிகளில் 99 ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களை மத்திய கல்வி அமைச்சகம் உருவாக்கி வருவதாக மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி இன்று கூறினார்.
பெரும்பான்மையான ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் ஆகியவற்றால் இணைந்து கட்டப்பட்டு வருவதாக திரு நக்வி தெரிவித்தார்.
ஜார்க்கண்டில் உள்ள பகூரில் ஜவஹர் நவோதயா வித்யாலயாவுக்கான அடிக்கல்லை மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' முன்னிலையில் மெய்நிகர் முறையில் நாட்டிய திரு முக்தர் அப்பாஸ் நக்வி மேற்கண்டவாறு கூறினார்.
பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கும், ஊரக பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கும் தரமான கல்வியை மிகவும் குறைவான செலவில் ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் வழங்கும் என்று திரு நக்வி மேலும் கூறினார்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அதிகமாக வாழும் பகுதிகளில் அமைக்கப்படும் ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களில் 1173 திறன்மிகு வகுப்பறைகளை அமைப்பதற்காக மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் ரூபாய் 36 கோடியை வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662082
------
(வெளியீட்டு அடையாள எண்: 1662130)
வருகையாளர் எண்ணிக்கை : 193