அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

2020 ஆம் ஆண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தேசிய விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குழுமம் அறிவிப்பு

Posted On: 06 OCT 2020 5:10PM by PIB Chennai

ஆண்டு தோறும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறப்பாக  செயல்பட்ட வர்களுக்கு வழங்கப்படும் தேசிய விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குழுமம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், தேசிய அறிவியல் தினமான பிப்ரவரி 28ஆம் தேதி புதுதில்லியில் இந்த விருதுகள் வழங்கப்படும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தலை சிறந்து விளங்குபவருக்கு ரொக்கப் பணமாக ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும். இதுதவிர அச்சு மற்றும் காட்சி ஊடகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தியது, குழந்தைகளிடத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை சிறப்பாக கொண்டு சேர்த்தது, பிரபலமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இலக்கியங்களை மொழி பெயர்த்தல், பாரம்பரிய முறைகளில் புதிதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை வளர்ச்சி அடையச் செய்தது உள்ளிட்ட பிரிவுகளுக்கு தலா 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.

இந்த விருதுக்கு விண்ணப்பிப்பது குறித்து மேலும் தெரிந்துகொள்ள கீழ்காணும் இணையதள முகவரியை காணவும் : www.dst.gov.in

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662048

----- 


(Release ID: 1662095)