வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

தேசிய தலைநகரப் பகுதி திட்ட வாரியத்தால் அறிவிக்கப்பட்ட மொத்தம் 366 திட்டங்களில் 269 நிறைவடைந்து விட்டது, 97 நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன: திரு ஹர்தீப் சிங் பூரி

Posted On: 05 OCT 2020 4:37PM by PIB Chennai

தேசிய தலைநகரப் பகுதி திட்ட வாரியத்தால் அறிவிக்கப்பட்ட மொத்தம் 366 திட்டங்களில் 269 நிறைவடைந்து விட்டதாகவும், எஞ்சிய 97 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு துறை இணை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

தேசிய தலைநகரப் பகுதி திட்ட வாரியத்தின் 39-வது கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், சுமார் 31 ஆயிரத்து 853 கோடி ரூபாய் செலவில் 366 திட்டங்கள் நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 15 ஆயிரத்து 393 கோடி ரூபாயை திட்ட வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளது என்றும், இதுவரை 12 ஆயிரத்து 446 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தேசிய தலைநகரப் பகுதியில் போக்குவரத்தை சீர் செய்ய இந்த வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பெருநகர நொய்டா மெட்ரோ திட்டம் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள்  மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய தலைநகரப் பகுதி, வரும் 2027 ஆம் ஆண்டுக்குள் உலகின் சிறந்த தலைநகர பகுதியாக விளங்கும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் அரியானா முதலமைச்சர் திரு மனோகர் லால்கட்டர், டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661758

 

*********

(Release ID: 1661758)



(Release ID: 1661764) Visitor Counter : 127