வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தேசிய ஸ்டார்ட் அப் விருதுகளுக்கான வெற்றியாளர்கள் 2020 அக்டோபர் 6 அன்று அறிவிக்கப்பட இருக்கிறார்கள்

प्रविष्टि तिथि: 05 OCT 2020 2:06PM by PIB Chennai

புது தில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் 2020 அக்டோபர் 6 அன்று முதலாம் தேசிய  ஸ்டார்ட் அப் விருதுகளின் முடிவுகளை ரயில்வே, தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் அறிவிக்க உள்ளார்.

மத்திய தொழில் மற்றும் வர்த்தகம் இணை அமைச்சர் திரு சோம் பர்காஷ் முன்னிலையில் மெய்நிகர் பாராட்டு விழா நடைபெறும். தேசிய தகவல் மையம் (என் ஐ சி) மை கவ் மற்றும் தொடர்புடைய இதர சமூக ஊடக பக்கங்களில் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பாகும்.

புதுமையான பொருட்கள் அல்லது தீர்வுகளை உருவாக்கும் புது நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்காக தேசிய ஸ்டார்ட் அப் விருதுகளை மத்திய தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை முதன்முறையாக உருவாக்கியுள்ளது

முதலீட்டாளர்களுக்கு பொது நிறுவனங்கள் வழங்கிய லாபத்தை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், சமூக நலனுக்கான பொருட்களுக்கும் தேவைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

 

12 துறைகளில் உள்ள 35 பிரிவுகளில் இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் பட்டிருந்தது. வேளாண்மை, கல்வி, தொழில் முனைவு தொழில்நுட்பம், எரிசக்தி, நிதி, உணவு, சுகாதாரம், தொழில்கள் 4.0, விண்வெளி, பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் நகர்ப்புற சேவைகள் ஆகியவை இந்த துறைகளாகும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661717

******

 

(Release ID: 1661717)


(रिलीज़ आईडी: 1661752) आगंतुक पटल : 291
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Punjabi , Telugu , Malayalam