வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

பென்குவின் நிறுவனத்தின் வெளியீட்டில், அமிதாப் பச்சன் முன்னுரை எழுதிய, அசாமின் பாரம்பரியத்தை கண்டறிதல் என்ற காபி டேபிள் புத்தகத்தை அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார்

Posted On: 04 OCT 2020 6:59PM by PIB Chennai

வட கிழக்கு மாகாண வளர்ச்சிக்கான மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், அசாமின் பாரம்பரியத்தை கண்டறிதல் என்ற தலைப்பில் பென்குவின் நிறுவனம் வெளியிட்டு, அமிதாப்பச்சன் முன்னுரை எழுதிய காபி டேபிள் புத்தகத்தை இன்று வெளியிட்டார்.

வண்ணப் படங்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய இந்த புத்தகத்தில் வடகிழக்கு மாகாணத்தின் மிகப் பெரிய மாநிலமான அசாமின் பாரம்பரியம், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த புத்தகத்தின் ஆசிரியரும் இந்திய வருவாய் துறை அலுவலருமான திரு பதம்பனி போராவை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டினார். வருவாய்த்துறை அலுவலராக இருந்த போதிலும் வடகிழக்கு மாகாணங்கள் குறித்த பல்வேறு புத்தகங்களை திரு பதம்பணி போரா எழுதியுள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், வடகிழக்கு பகுதியை இந்தியாவின் பிற மாகாணங்களோடு இணைப்பது குறித்து பெரும்பாலும் பேசப்பட்டு வந்த போதிலும், இந்த மாகாணத்தின் பல்வேறு அம்சங்களை இந்தியாவின் பிற பகுதிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். அதற்கு இந்த புத்தகம் உறுதுணையாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661607

****************


(Release ID: 1661623) Visitor Counter : 133