சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
சமூக ஊடக பயனர்களுடன் உரையாடிய டாக்டர் ஹர்ஷ் வர்த்தன், மிக அதிக அளவில் கொவிட்-19 தடுப்பு மருந்துகளை அரசு வாங்கவுள்ளதாக தெரிவித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
04 OCT 2020 2:26PM by PIB Chennai
சமூக ஊடக பயனர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சன்டே சாம்வாத் நிகழ்ச்சியின் நான்காம் பகுதியின் போது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் திரு ஹர்ஷ் வர்த்தன் பதிலளித்தார்.
மிக அதிக அளவில் கொவிட்-19 தடுப்பு மருந்துகளை வாங்க அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், 400 முதல் 500 மில்லியன் தடுப்பு மருந்து அளவுகளை பயன்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஜூலை 2021-க்குள் 20 முதல் 25 கோடி மக்களை சென்றடைவது தான் அரசின் இலக்கு என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் தெரிவித்தார்.
அக்டோபருக்குள் முன்னுரிமை மக்கள் குழுக்களைப் பற்றிய தகவல்களை வழங்க மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.
மிக அதிக முன்னுரிமை கொவிட்-19 முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661531
****************
(வெளியீட்டு அடையாள எண்: 1661550)
வருகையாளர் எண்ணிக்கை : 329
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Malayalam