உள்துறை அமைச்சகம்

அடல் சுரங்கத்தை திறந்து வைத்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சர் உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா நன்றி தெரிவித்தார்

प्रविष्टि तिथि: 03 OCT 2020 6:15PM by PIB Chennai

அடல் சுரங்கத்தை பொறியியல் அற்புதம் என்று வர்ணித்த மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, அதை திறந்து வைத்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

இதைக் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் கனவு நனவான நாளான இன்றைய தினம் ஒட்டுமொத்த நாட்டுக்கே வரலாற்று சிறப்பு மிக்க தினம்," என்றார்.

"உலகத்திலேயே மிகவும் நீளமான சுரங்கமான அடல் சுரங்கம், லே மற்றும் மணாலிக்கு இடையேயான பயண நேரத்தை 4-5 மணி நேரங்கள் வரை குறைக்கும். அனைத்து பருவ காலங்களிலும் இதை பயன்படுத்த முடியும். லஹவுல்-ஸ்பிதியை நாட்டின் இதர பகுதிகளோடு வருடம் முழுவதும் இது இணைக்கும். இதற்கு முன், இந்தப் பகுதி சில மாதங்களுக்கு துண்டிக்கப்பட்டிருந்தது," என்று திரு அமித் ஷா கூறினார்.

ஒட்டுமொத்த பிராந்தியத்துக்கே அடல் சுரங்கம் மிகப்பெரிய வரப் பிரசாதம் என்று கூறிய அவர், சிறப்பான மருத்துவ வசதிகள், தொழில் வாய்ப்புகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை எளிதாக மக்கள் இனி அடைய முடியும் என்றார் அவர்.

"நமது ராணுவ தயார்நிலையை இது வலுப்படுத்துவதோடு, சுற்றுலாத் துறைக்கும் ஊக்கமளிக்கும்," என்று திரு அமித் ஷா கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661364

****************


(रिलीज़ आईडी: 1661419) आगंतुक पटल : 163
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , Manipuri , Bengali , Punjabi , Gujarati