சுற்றுலா அமைச்சகம்

டெக்னோ அப்னா தேஷ் வெபினார் தொடர் நிகழ்வின் கீழ் சர்கே பெ சார்ச்சா என்ற வெபினாரை மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு சுற்றுலாத்துறை அமைச்சகம் ஒருங்கிணைத்திருக்கிறது.

Posted On: 03 OCT 2020 1:14PM by PIB Chennai

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, டெக்னோ அப்னா தேஷ் வெபினார் தொடர் நிகழ்வின் கீழ் சர்கே பெ சார்ச்சா என்ற வெபினாரை சுற்றுலாத்துறை அமைச்சகம் 2020-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி ஒருங்கிணைத்தது. சர்கே பெ சார்ச்சா என்ற வெப்பினார் தலைப்பு சுழலும் சர்க்கரம் மற்றும் காதி ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. காதி எனும் தேசத்தின் தார்மீக இழை என்பது ஸ்வராஜ்யம் மற்றும் ஸ்வ்வம்பனுக்கான ஒரு உருவகம் ஆகும். இந்தியாவின் விஷயத்தைப் போல ஒரு துணியைச் சுற்றி காலனித்துவ எதிர்ப்பு கதை சுழன்றதை நீங்கள் காண்பது உலக வரலாற்றில் எங்கும் இல்லை. வெளிநாட்டு துணிகளை புறக்கணித்தது முதல் கைத்தறியை முன்னெடுத்தது வரை, கைத்தறியில் நெய்யப்பட்ட கதர்சுழலும் சர்க்கரம் அல்லது சர்க்கரம் என்பது இந்தியாவுக்கான ஒரு அரசியல் மற்றும் உணர்வுப்பூர்வமான சின்னமாக இருக்கிறது. இது மகாத்மா காந்தி எனும் ஒரு மனிதரின் பரிசாகும். சுயசார்பு கிராமம் என்ற அவரது கண்ணோட்டம் மற்றும் ஆத்ம சுத்தம் ஆகியவை அனைத்தும் அந்த சர்க்கரத்தில் இழையாக பிணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடந்த சுதந்திர போராட்டத்தில் காதியின் பன்முகத்தை கண்டறிவது மற்றும் பெங்களூரு என்ஐஎஃப்டியின் பயணத்தை கண்டறிவதும் காதியைப் பற்றி சிந்திப்பதில் மற்றும் பாபுவின் செய்தியை பரப்புவதும் இந்த வெப்பினாரின் நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661264

****************



(Release ID: 1661304) Visitor Counter : 114