பிரதமர் அலுவலகம்
வைபவ் 2020 மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி தொடக்க உரையாற்றினார்.
Posted On:
02 OCT 2020 8:33PM by PIB Chennai
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானிகள்& கல்வியாளர்கள் 3000-த்துக்கும் மேற்பட்டோர் மற்றும் 10,000-த்துக்கும் மேற்பட்ட இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
அதிக அளவில் இளைஞர்கள் அறிவியல் மீதான ஆர்வத்தை வளர்த்தெடுக்க வேண்டும்; பிரதமர்
இந்தியாவில் மேற்கொள்ளப்படும் விண்வெளி சீர்த்திருத்தங்களின் முன்னோட்டம் காரணமாக தொழிலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும்; பிரதமர்
2025-ம்ஆண்டுக்குள் காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற இலக்கை இந்தியா கொண்டுள்ளது; பிரதமர்
புதுதில்லி, அக்.3, 2020:
“அதிக அளவுக்கு இளைஞர்கள் அறிவியலில் ஆர்வத்தை வளர்த்தெடுக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது. அதற்காக நாம் வரலாற்று அறிவியலை மற்றும் அறிவியலின் வரலாற்றை நாம் நன்கு அறிந்திருக்க வேண்டும்” என வெளிநாடுகளைச் சேர்ந்த மற்றும் இந்தியாவில் வசிக்கும் இந்திய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்ட சர்வதேச இணையதள மாநாடான வைஸ்விக் பாரதிய வாக்யானிக்(வைபவ்) மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் திரு.நரேந்திரமோடி உரையாற்றினார்.
“இந்தியா மற்றும் உலகத்தில் இருந்து புதுமை மற்றும் அறிவியலை வைபவ் மாநாடு 2020 கொண்டாடுகிறது. இது ஒரு உண்மையான சங்கமம் அல்லது பெரிய மனங்களின் சங்கமம் என்று கூறுவேன். இந்த கூட்டத்தின் மூலம் நமது கிரகம் மற்றும் இந்தியாவை மேம்படுத்துவதற்கான நமது நீண்டகால தொடர்பை உருவாக்க நாம் அமர்ந்திருக்கின்றோம்,” என்றார் அவர்.
பிரதமர் நரேந்திரமோடி மேலும் கூறுகையில், “சமூக பொருளாதார மாற்றத்தை உருவாக்கும் வகையில் அறிவியலில் புதுமை எனும் முக்கியமான முயற்சிகளை முன்னெடுத்திருக்கின்றோம். இந்திய அரசு அறிவியல் ஆராய்ச்சிக்கு ஊக்கம் கொடுக்க பல்வேறு எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது,” என்றார்.
தடுப்பூசிகளைக் கண்டறிவதில் மற்றும் தடுப்பூசி திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியா தொடர் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அவர் கூறுகையில், “தடுப்பூசி உற்பத்தியில் நீண்டகாலமாக இருந்து வந்த இடைவெளி நீக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு நமது நோய் தடுப்புத் திட்டத்தில் நான்கு புதிய தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோட்டோ தடுப்பூசியும் இதில் அடக்கம்,” என்றார்.
சர்வதேச இலக்குக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவில் இருந்து 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற லட்சியப்பணியையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய அளவில் விரிவாக நடைபெற்ற ஆலோசனைகள் மற்றும் விவாதங்களுக்குப் பிறகு, 30 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய கல்விக் கொள்கை 2020 கொண்டு வரப்பட்டதாக திரு.நரேந்திரமோடி சுட்டிக்காட்டினார். அறிவியலை நோக்கிய ஆர்வத்தை முன்னெடுப்பதும் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்கு அதிக பட்ச ஊக்கத்தை கொடுப்பதுமே இந்த கொள்கையின் நோக்கம். இது இளம் திறமைகளை வளர்த்தெடுப்பதற்கான திறந்த மற்றும் பரந்த சூழலை வழங்குகிறது என்றும் பிரதமர் கூறினார்.
இந்தியாவில் மேற்கொள்ளப்படும் விண்வெளி சீர்த்திருத்தங்களின் முன்னோட்டம் காரணமாக தொழிலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
லேசர் இன்டர்ஃபெரோ மீட்டர் ஈர்ப்பு அலை ஆய்வகம், சிஇஆர்என் மற்றும் சர்வதேச தெர்மோ நியூக்ளியர் பரிசோதனை உலை (ஐடிஇஆர்) ஆகியவற்றில் இந்தியாவின் பங்கெடுப்பு பற்றி குறிப்பிட்டார். சர்வதேச அளவில் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி முயற்சிகளின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துக் காட்டினார்.
சூப்பர் கம்ப்யூட்டிங் மற்றும் சைபர் வேதியியல் முறைகளில் இந்தியாவின் முக்கிய இயக்கங்களை அவர் சுட்டிக்காட்டினார். செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், சென்சார்கள், பெரும் தரவு ஆய்வுகள் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அடிப்படை ஆய்வுகள் மற்றும் அப்ளிகேஷன்கள் காரணமாக இந்தியாவில் தயாரிப்போம் மற்றும் ஸ்டார்ட் அப் துறைகள் ஊக்கம் பெறும் என்றும் அவர் பேசினார்.
இந்தியாவில் ஏற்கனவே 25 புதுமையான தொழில்நுட்ப மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது ஸ்டார்ட்அப் சூழலை எவ்வாறு மேலும் அதிகரிக்கும் என்பது பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார்.
விவசாயிகளுக்கு உதவுவதற்காக இந்தியா உயர் தரமான ஆராய்ச்சிகளை விரும்புகிறது என்ற அவர், பயறு வகைகள் மற்றும் உணவு தானியங்களின் உற்பத்தி அதிகரித்ததற்கு விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.
இந்தியாவும் முன்னோற்றம் அடையும் போது உலகமும் முன்னேறும் என்று பிரதமர் கூறினார்.
இணைப்பு மற்றும் வழங்குவதில் வைபவ் பெரிய வாய்ப்புகளை அளிக்கிறது. இந்தியா முன்னேறும் போது, உலகமும் முன்னிலை வகிக்கிறது. வைபவ் சிறந்த மனங்களின் சங்கம் என்று அழைத்த அவர், இந்த முயற்சிகள் சிறந்த ஆராய்ச்சி சூழல் அமைப்பை உருவாக்க உதவும், நவீன மயத்துடன் பாரம்பர்யத்தை இணைப்பது செழிப்பை உருவாக்கும் என்று கூறினார். இந்த பரிமாற்றங்கள் நிச்சயமாக உபயோகமானதாக இருக்கும், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் உபயோகமான ஒத்துழைப்பையும் இது முன்னெடுக்கும். விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் இந்த முயற்சிகள் சிறந்த ஆராய்ச்சி சூழல் அமைப்பை உருவாக்கும் என்றார் பிரதமர்.
வைபவ் மாநாட்டில் 3000-த்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு வாழ் இந்திய வம்சாவளி கல்வியாளர்கள் மற்றும் 55 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 10,000 பேரும் பங்கேற்றுள்ளனர். இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் தலைமையிலான அறிவியல் & தொழில்நுட்பத்துறைகள் 200 இந்திய கல்வி மையங்கள் இதனை ஒருங்கிணைத்துள்ளன. சராசரியாக 40 நாடுகளைச் சேர்ந்த 700 வெளிநாட்டு குழு உறுப்பினர்கள், இந்திய கல்வி நிறுவனங்களின் புகழ் பெற்ற 629 உள்ளூர் குழு உறுப்பினர்கள் மற்றும் அறிவியல் & தொழில்நுட்பத் துறைகள் சார்பில் 18 வெவ்வேறு பகுதிகளில் 80 உபதலைப்புகளில் 213 அமர்வுகளில் விவாதங்கள் நடைபெறுகின்றன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661131
*********************
(Release ID: 1661288)
Visitor Counter : 330
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam