குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 150 நிகழ்சிகளுக்கு காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் ஏற்பாடு: காதி பொருட்களுக்கு 20% தள்ளுபடி
Posted On:
02 OCT 2020 4:38PM by PIB Chennai
மகாத்மா காந்தியின் 151வது பிறந்த தினத்தை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீரில் வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகளை, காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம்(கேவிஐசி) தொடங்கியது. நாடு முழுவதும் காதித்துறை விற்பனை மையங்களில் அனைத்து பொருட்களுக்கும் குறிப்பிட்ட காலத்துக்கும் 20% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
‘கும்கர் ஷாசக்திகரன் திட்டத்தின்’ கீழ் பாராமுல்லாவில், பானை செய்யும் 100 குடும்பங்களுக்கு மின்சாரத்தில் இயங்கும் பானை செய்யும் சக்கரத்தை கேவிஐசி தலைவர் திரு. வினய் குமார் சக்சேனா வழங்கினார். இது தவிர கந்தர்பால், புல்வாமா, பாராமுல்லா, மாவட்டங்களில் எம்பிராய்டரி, கூடை பின்னும் பயிற்சி வகுப்புகளையும் திரு.சக்சேனா தொடங்கி வைத்தார். இதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
மேலும், மும்பையில் உள்ள காதி மற்றும் கிராம தொழில் ஆணைய அலுவலகத்தில் 3.5 அடி உயர இராட்டை சக்கரத்தை கேவிஐசி தலைவர் வினய் குமார் சக்சேனா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
காந்திஜியின் 151வது பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும், 150 நிகழ்ச்சிகளுக்கு காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. நாடு முழுவதும் உள்ள காதித்துறை விற்பனை மையங்களில், அனைத்து பொருட்களுக்கும், குறிப்பிட்ட காலத்துக்கு 20% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661017
****************
(Release ID: 1661079)
Visitor Counter : 122