நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் தமிழ்நாடு, அருணாச்சல பிரதேசம் இன்று இணைந்தன

Posted On: 01 OCT 2020 5:10PM by PIB Chennai

தமிழ்நாடு மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய இன்னும் இரண்டு மாநிலங்கள் இன்று ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் இணைந்தன, இதன் மூலம், 28 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தற்போது இத்திட்டத்தில் இணைந்துள்ளன.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ள அனைத்து தகுதியுடைய ரேசன் அட்டைதாரர்கள்/பயனாளிகளுக்கும் அவர்களுக்கு உரித்தான பொருள்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளும் வசதியை அளிப்பதற்காக ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தை செயல்படுத்துவது இந்திய அரசின் உணவு & பொது விநியோகத் துறையின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும்.

இந்த திட்டத்தின் கீழ், மின்னணு விற்பனை முனையக் கருவியைப் பொருத்துவதன் மூலம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்பை நிறுவுவது, பயனாளிகளின் ஆதார் எண்களை அவர்களின் குடும்ப அட்டைகளோடு இணைப்பது மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உயிரி அடையாளத் தொழில்நுட்ப முறையைக் கொண்டு  விற்பனை முனையக் கருவி பரிவர்த்தனைகளை செயல்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், குடும்பஅட்டைகளின் நாடு தழுவிய பெயர்வுத்திறன் வசதியின் துணையோடு அதிக அளவில் மானியங்கள் அளிக்கப்படும் உணவு தானியங்கள் விநியோகிக்கப்படுகிறது.

தற்சமயம், ஆந்திர பிரதேசம், பீகார், தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையு, கோவா, குஜராத், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், ஜார்கண்ட், கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மிசோராம், நாகாலாந்து, ஒதிஷா, ராஜஸ்தான், பஞ்சாப், சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்திர பிரதேசம், லட்சத்தீவுகள், லடாக் மற்றும் உத்திரகாண்ட் ஆகிய 24 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளன.

இதன் மூலம், குடும்ப அட்டைதாரரின் தேவையைப் பொருத்து முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ரேசன் பெயர்வுத்திறனை இடம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் இந்த மாநிலங்களுக்குள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660672

****************


(Release ID: 1660808) Visitor Counter : 172