உள்துறை அமைச்சகம்
குவைத் மன்னர் மேன்மைமிகு ஷேக் சபாஹ் அல்-அகமது அல்-ஜபெர் அல்-சபாஹ்வின் மறைவையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 2020 அக்டோபர் 4 அன்று ஒரு நாள் துக்கம்
Posted On:
01 OCT 2020 4:29PM by PIB Chennai
குவைத் மன்னர் மேன்மைமிகு ஷேக் சபாஹ் அல்-அகமது அல்-ஜபெர் அல்-சபாஹ் 2020 செப்டம்பர் 29 அன்று மறைந்தார். மறைந்த அரசருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 2020 அக்டோபர் 4 அன்று ஒரு நாள் துக்கத்தை நாடு முழுவதும் அனுஷ்டிக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது.
தேசிய கொடி வழக்கமாக பறக்கும் நாடு முழுவதுமுள்ள அனைத்து கட்டிடங்களிலும் அன்று அது அரை கம்பத்தில் பறக்கும். அன்றைய தினம் எந்த அரசு நிகழ்ச்சியும் நடைபெறாது.
*****************
(Release ID: 1660801)
Visitor Counter : 144