நிதி அமைச்சகம்
2020-21-ஆம் நிதி ஆண்டின் ஆகஸ்ட் மாதம் வரையிலான மத்திய அரசின் நிதி கணக்குகளின் மாதாந்திர ஆய்வு
Posted On:
30 SEP 2020 5:19PM by PIB Chennai
2020-21-ஆம் நிதி ஆண்டின் ஆகஸ்ட் மாதம் வரையிலான மத்திய அரசின் நிதி கணக்குகளின் மாதாந்திர ஆய்வு நடத்தப்பட்டு, அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. முக்கிய அம்சங்கள் வருமாறு:
இந்திய அரசு ஆகஸ்ட 2020 வரை ரூ.₹3,77,306 கோடியை (மொத்த வரவுகளுக்கான 2020-21 பட்ஜெட் மதிப்பீட்டில் 16.80%) வருவாயாக பெற்றுள்ளது. இதில் வரிவருவாய் (மத்திய அரசுக்கான நிகரத்தொகை) ரூ.2,84,495 கோடி, வரி அல்லாத வருவாய் ரூ.86,147 கோடி மற்றும் கடன் அல்லாத மூலதன வருவாய் ரூ.6,664 கோடி ஆகியன உள்ளடங்கும்.
கடன் அல்லாத மூலதன வருவாய் என்பதில் கடன்களைத் திரும்ப பெற்றதும் (ரூ.6,635 கோடி) உள்ளடங்கும். வரிவருவாயில் பங்கினைப் பிரித்துத் தருதல் என்ற முறையில் இந்திய அரசு மாநில அரசுகளுக்கு இந்தக் காலகட்டத்தில் ரூ.2,17,976 கோடியை வழங்கியுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.37,629 கோடி குறைவாகும்.
இந்திய அரசின் மொத்தச் செலவினம் ரூ.12,47,653 கோடி ஆகும் (2020-21 பட்ஜெட் மதிப்பீட்டில் 41.01%). இதில் ரூ.11,13,206 கோடி வருவாய் கணக்கு மற்றும் ரூ.1,34,447 கோடி மூலதனக் கணக்கு ஆகும்.
மொத்த வருவாய் செலவினத்தில் ரூ.2,37,662 கோடி வட்டி செலுத்துவதற்கும் ரூ.1,30,700 கோடி முக்கியமான மானியங்களுக்கும் செலவழிக்கப்பட்டுள்ளது.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660332
*****
(Release ID: 1660332)
(Release ID: 1660578)