அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
டிஎஸ்டி பொன்விழா உரைத் தொடரின் ஒரு பகுதியாக ‘ பெருந்தொற்றின் மறுபக்கம்’ குறித்த பிரமுகர்களின் விவாதம்
இடுகை இடப்பட்ட நாள்:
28 SEP 2020 4:51PM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் 50 ஆண்டு பொன்விழா சொற்பொழிவின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘ பெருந்தொற்றின் மறுபக்கம்’ என்னும் ஆன்லைன் குழு விவாதத்தில் பங்கேற்ற பிரமுகர்கள் கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றி விவாதித்தனர்.
‘’ இந்தக் கருப்பொருள் இரண்டு மாறுபட்ட பக்கங்களைக் கொண்டது. இந்தப் பெருந்தொற்றிலிருந்து நாம் கற்றுக்கொண்ட கட்டாயப் படிப்பினையின் மூலம், அறிவியல், தொழில்நுட்பம், புதுமையான கண்டுபிடிப்பு ஆகியவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது ஒன்று, மற்றொன்று, சவால்கள் மற்றும் புதிய வாய்ப்புகள். பெருந்தொற்றின் மறுபக்கத்தை, ஒன்றிணைந்து கண்டறியும் வாய்ப்புகளாகக் கருதி, இந்த வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’, என்று அறிவியல் தொழில்நுட்பத்துறை செயலர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா தெரிவித்தார்.
இந்த ஆன்லைன் குழு விவாதத்தை மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின் அறிவியல் தொழில்நுட்பத் தொடர்புக்கான தேசிய கவுன்சில், விஞ்ஞான் பிரசார் ஆகியவை இணைந்து அண்மையில் ஏற்பாடு செய்திருந்தன.
(வெளியீட்டு அடையாள எண்: 1659865)
வருகையாளர் எண்ணிக்கை : 163