சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கடந்த 24 மணி நேரத்தில் 93,000-க்கும் அதிகமானோர் குணமடைந்த நிலையில் தொடர்ந்து அதிக அளவிலான குணமடைதல்களை இந்தியா கண்டு வருகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 26 SEP 2020 11:06AM by PIB Chennai

அதிக அளவிலான கொவிட் நோயாளிகள் தினமும் தொடர்ந்து குணமடைந்து வரும் நிலையில், இந்தியாவில் குணமடைதல் விகிதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 93,000-க்கும் அதிகமானோர் (93,420) நாட்டில் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், மொத்த குணமடைந்தோரின் எண்ணிக்கை 48,49,584-ஐ தொட்டுள்ளது.

அதிக அளவிலான நோயாளிகள் கொவிட் தொற்றில் இருந்து தினமும் குணமடைந்து வருவதால், குணமடைதல் விகிதமும் உயர்ந்துக் கொண்டே வருகிறது. தற்சமயம் அது 82.14 சதவீதமாக இருக்கிறது.

உலகத்திலேயே அதிக அளவில் குணமடைதல் விகிதங்களை கண்டு வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். குணமடைந்தோர் மற்றும் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கைக்கு இடையேயான இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது. தற்போது சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகம் ஆகும்.

தற்போது சிகிச்சை பெறுவோரை விட (9,60,969) குணமடைந்தோரின் எண்ணிக்கை (38,88,615) கிட்டத்தட்ட 39 லட்சம் அதிகம் ஆகும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1659250

*


(வெளியீட்டு அடையாள எண்: 1659376) வருகையாளர் எண்ணிக்கை : 165
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Telugu , Malayalam