மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
‘ஷிக்ஷாக் பர்வ்’ திட்டத்தின் கீழ் ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி குறித்த தேசிய இணைய கருத்தரங்கு
Posted On:
25 SEP 2020 5:28PM by PIB Chennai
ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி குறித்த இணைய கருத்தரங்கு ஷிக்ஷாக் பர்வ் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்தது. புதிய கல்வி கொள்கையின் சிறப்பம்சங்களை எடுத்து கூறுவதற்காக இந்த இணைய கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. புதிய கல்வி கொள்கையை ஆசிரியர்கள் முன்னெடுத்து செல்வதற்காக ஷிக்ஷாக் பர்வ் நிகழ்ச்சியை கல்வி அமைச்சகம் செப்டம்பர் 8ம் தேதி முதல் - 25ம் தேதி வரை நடத்துகிறது.
ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி நிகழ்ச்சியை என்சிஇஆர்டி இணை பேராசிரியர் டாக்டர் ரொமிலா சோனி, அம்பேத்கர் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் வெனிதா கவுல், என்சிஇஆர்டி பேராசிரியர் சுனிதி உட்பட பலர் வழங்கினர்.
இந்த ஆலோசனை கூட்டத்தை தொடங்கி வைத்த, பேராசிரியர் சுனிதி, தேசிய கல்வி கொள்கையின் பரிந்துரைகளை விளக்கினார். குழந்தைகளுக்கு ஆரம்ப காலத்தில் வழங்கப்பட வேண்டிய ஊட்டசத்துக்களின் முக்கியத்துவம் குறித்தும் அவர் பேசினார்.
குழந்தைகளுக்கு கல்வி திறமைகளை வளர்க்கும்போதே, கூடுதலாக சமூக திறமைகளை வளர்க்க வேண்டியதன் அவசியத்தை டாக்டர். கவுல் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1659060
(Release ID: 1659112)
Visitor Counter : 201