சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

குவாலியரில் உலகத்தரம் வாய்ந்த ‘மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு மையத்திற்கு’ அடிக்கல் நடப்பட்டது

Posted On: 25 SEP 2020 4:52PM by PIB Chennai

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உலகத்தரம் வாய்ந்த ‘மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு மையத்திற்கு’ அடிக்கல் நடப்பட்டது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளிக்கு அதிகாரமளித்தல் துறை இந்த நிகழ்ச்சியினை காணொளிப்பதிவு மூலம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர், மத்திய பிரதேசத்தின் மாற்றுத்திறனாளிகளுக்காக உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மையத்தை உருவாக்குவதற்கான முயற்ச்சியை மேற்கொண்டதற்காக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு. தாவர்சந்த் கெலாட்டிற்கு நன்றி தெரிவித்தார்.

தற்போது மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி  அளிக்கும் வசதிகள் எதுவும் நாட்டில் இல்லை. தற்போது காட்டப்படும் இந்த விளையாட்டு மையம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பயிற்சி வசதிகளை அளிக்கும் என்று தெரிவித்தார்.

ரூ. 170.99 கோடி செலவில் கட்டப்பட உள்ள இந்த விளையாட்டு மையத்திற்கு மத்திய அமைச்சரவை பிப்ரவரி 28, 2019 அன்று ஒப்புதல் அளித்தது. 

ஒரு வெளிப்புற தடகள அரங்கம், உட்புற விளையாட்டு வளாகம், பேஸ்மென்ட் பார்க்கிங் வசதி; இரண்டு நீச்சல் குளங்கள் போன்ற பல வசதிகள் இந்த மையத்தில் அமைக்கப்படுகிறது.



(Release ID: 1659111) Visitor Counter : 121