குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் ஜாம்பவான் சுனில் சேத்தி, காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் ஆலோசகராக நியமணம்

Posted On: 25 SEP 2020 4:51PM by PIB Chennai

காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் ஆலோசகராக இந்திய பேஷன் துறையின் முன்னோடியான திரு. சுனில் சேத்தி நியமிக்கப்பட்டுள்ளார். ஆயத்த ஆடைகளில் சமீபத்திய வடிவமைப்புகள் போக்கு குறித்து சேத்தி ஆணையத்திற்கு ஆலோசனை வழங்குவார்.

காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, திரு. சேத்தி ஒரு வருட காலத்திற்கு ஆலோசகராக இருப்பார்.

திரு சேத்திக்கு உலகளாவிய வர்த்தகத்தில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளது. பல புதுமையான மற்றும் வெற்றிகரமான முன்முயற்சிகள் மூலம் இந்திய கைவினைப்பொருட்கள், வடிவமைப்பு மற்றும் ஜவுளித் துறையின் வளர்ச்சிக்கு அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். 400 வடிவமைப்பாளர்களை ஒன்றிணைக்கும் இந்திய பேஷன் டிசைன் கவுன்சிலின் தலைவராக , இந்திய பேஷன் துறையை உலகளவில் கொண்டு செல்ல சேத்தி செயல்பட்டு வருகிறார்.



(Release ID: 1659110) Visitor Counter : 119