பிரதமர் அலுவலகம்

கோவிட் அதிகம் பாதித்துள்ள ஏழு மாநில/யூனியன் பிரதேச முதலமைச்சர்கள், சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நடந்த மெய்நிகர் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் மொழியாக்கம்

Posted On: 23 SEP 2020 8:05PM by PIB Chennai

நண்பர்களே, கொரோனா சிக்கல் குறித்து நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் இந்த நாள், நாட்டின் சுகாதார வரலாற்றில் மிகவும் முக்கியமான நாளாக பொருந்தியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா தொடங்கப்பட்டது.

இந்த இரண்டு ஆண்டுகளில், இந்தத் திட்டத்தின்கீழ், 1.25 கோடிக்கும் அதிகமான  ஏழை நோயாளிகள் இலவச மருத்துவ சிகிச்சைபெற்றுள்ளனர்.

இந்த நேரத்தில், நான் அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை, குறிப்பாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு சிகிச்சை அளித்து தொண்டாற்றி வருபவர்களை ஊக்குவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நண்பர்களே, இன்றைய நமது விவாதத்தின்போது, பல்வேறு விஷயங்கள் எழுப்பப்பட்டன.தெளிவான எதிர்கால உத்தியை வகுப்பதற்கு இது நமக்கு பயன்படும்.

இந்தியாவில் தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவது உண்மையே. ஆனால் இன்று, நாம் 10 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகளை நடத்தி வருகிறோம். நோயிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்து வருகிறது.

பல மாநிலங்களிலும், மாநிலங்களின் உள்ளூர் மட்டத்திலும் மிகச்சிறந்த நடைமுறைகள் பின்பற்றப்படுவதை நாம் காண்கிறோம்.

இந்த அனுபவங்களை நாம் மேலும் மேம்படுத்த வேண்டும்.

நண்பர்களே, கடந்த சில மாதங்களாக கொரோனா சிகிச்சைக்காக நாம் உருவாக்கியுள்ள வசதிகள், அந்த நோய் தொற்றுக்கு எதிராகப் போராட நமக்கு பெரிதும் உதவியிருக்கிறது.

மறுபுறம், கொரோனா தொடர்பான கட்டமைப்புகளை நாம் மேலும் வலுப்படுத்த வேண்டியுள்ளது. நோய் கண்டறிதல் மற்றும் தேடுதல் கட்டமைப்பை, சிறந்த பயிற்சிக்காக நாம் மேம்படுத்த வேண்டியுள்ளது.

கொரோனா சிறப்பு கட்டமைப்பு தொடர்பாக, மாநில பேரிடர் மீட்பு நிதியைப் பயன்படுத்துவது குறித்த முக்கியமான முடிவை இன்றே நாம் எடுத்துள்ளோம்.

பல மாநிலங்கள் இது குறித்த வேண்டுகோளை வைத்துள்ளன.

இன்று, இந்த நிதியைப் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள வரம்பை 35 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போரில், மாநிலங்கள் அதிக நிதியைப் பயன்படுத்த இந்த முடிவு உதவும்.

உங்களிடம் மிக முக்கியமான ஒன்றைக் கூற விரும்புகிறேன்.

கொரோனாவைத் தடுக்க ஒவ்வொரு மாநிலமும், ஓரிரண்டு நாட்களுக்கு உள்ளூர் முடக்க செயல்திறனை பகுப்பாய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

இதனால், உங்கள் மாநிலத்தில் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்குவதில்  பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம் அல்லவா?

என்னுடைய வேண்டுகோள், அனைத்து மாநிலங்களும் இது குறித்து தீவிரமாகச் சிந்திக்க வேண்டும் என்பதே.

நண்பர்களே, செயல்திறன் மிக்க பரிசோதனை, நோய் கண்டறிதல், சிகிச்சை, கண்காணிப்பு மற்றும் தெளிவான தகவல்களில் கவனத்தை நாம் அதிகரிப்பது மிகவும் அவசியமாகும்.

பெரும்பாலான தொற்று பாதிப்பு, அறிகுறியில்லாமல் இருப்பதால், வதந்திகள் பரவ வாய்ப்பு உள்ளதால், செயல்திறன் மிக்க தகவல் பரப்புதல் அத்தியாவசியத் தேவையாகும். பரிசோதனை தவறானதா என்ற சந்தேகம் சாதாரண மக்களிடம் பரவியுள்ளது. இத்துடன் நில்லாமல், தொற்றின் தீவிரத்தன்மை பற்றி உணராமல்,  தவறான புரிதலை மக்கள் மேற்கொள்ள முயலுகின்றனர்.

தொற்றைத் தடுப்பதில் முகக்கவசம் அணிவது முக்கியப் பங்கு வகிப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன. முகக்கவசம் அணியும் பழக்கத்தை உருவாக்குவது மிகவும் கடினமாகும். ஆனால், அன்றாட வாழ்வில் இதை அத்தியாவசியமான பகுதி என்று ஆக்காவிட்டால், அர்த்தமுள்ள ஆக்கபூர்வ பலன்களை நாம் அடைய முடியாது.

நண்பர்களே, கடந்தகால அனுபவங்களில் இருந்து நாம் தெரிந்து கொண்ட மூன்றாவது அம்சம், சரக்குகள் மற்றும் சேவை நகர்வை ஒரு மாநிலத்திலிருந்து மற்ற மாநிலத்துக்கு மேற்கொள்வதில் ஏற்படும் இடையூறு, பொது மக்களுக்கு தேவையற்ற துன்பத்துக்கு காரணமானது என்பதுதான்.

இது இயல்பான வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது.

உதரணமாக, அண்மையில் ஆக்சிஜன் கொள்முதலில் ஏற்பட்ட சிக்கலால், அதன் விநியோகம் தொடர்பாக சில மாநிலங்கள் சிரமங்களை எதிர்கொண்டன.

உயிர் காக்கும் ஆக்சிஜன் விநியோகத்தை தடையின்றி உறுதி செய்ய அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

இந்தச் சிக்கலான நேரத்திலும், உயிர் காக்கும் மருந்து விநியோகத்தை உலகம் முழுமைக்கும் இந்தியா உறுதி செய்துள்ளது. நாடு முழுவதும் மருந்துகள் எளிதாக கிடைக்கின்றன என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

நண்பர்களே, கொரோனா காலத்தில் நாடு காட்டி வரும்  சகிப்புத்தன்மை, கருணை, பேச்சு வார்த்தை, ஒத்துழைப்பு ஆகியவற்றுடன் நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

தொற்றுக்கு எதிரான போராட்டத்துடன், பொருளாதார விவகாரத்தில் முழு தீவிரத்துடன் நாம் தற்போது, முன்னேறிச் செல்ல வேண்டியுள்ளது.

இந்த விருப்பத்துடன், நமது கூட்டு முயற்சி வெற்றி பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி.



(Release ID: 1658760) Visitor Counter : 182