சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்களின் பாதுகாப்பு மதிப்பீடு தரநிலைகள் அறிவிப்பு

Posted On: 24 SEP 2020 12:53PM by PIB Chennai

மோட்டார் வாகன விதிமுறைகளில், 2020 செப்டம்பர் 23ம் தேதி செய்யப்பட்ட திருத்தம் மூலம், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கான பாதுகாப்பு மதிப்பீடு தரநிலைகளை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது நாட்டில் ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும். இது திறன் வாய்ந்தது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது.

ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள  உற்பத்தியாளர்கள் அவற்றை பரிசோதிக்க , தற்போது தரநிலைகள்  உள்ளன. இவை சர்வதேச தரத்துக்கு நிகராக உள்ளன.

----


(Release ID: 1658676) Visitor Counter : 253