ஊரக வளர்ச்சி அமைச்சகம்
நாடு முழுவதும் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை மேம்படுத்த தேசிய ஊட்டசத்து மாத நிகழ்ச்சிகளில் சுய உதவி குழுக்கள், தீன்தயாள் அந்த்யோதயா அமைப்பினர் மற்றும் ஊரக மேம்பாட்டு அமைச்சகம் தீவிரமாக பங்கேற்பு
Posted On:
24 SEP 2020 1:00PM by PIB Chennai
இளம்வயதினர், கர்ப்பிணி பெண்கள் , பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைப்பதற்காக பிரதமரின் ஊட்டசத்து திட்டம்(2018)-ன் கீழ் ஒருங்கிணைப்பு மற்றும் நடத்தை மாற்ற முயற்சிகளுக்கு வேகத்தை அளிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்படுகிறது.
தேசிய ஊட்டச்சத்து மாதத்தை கொண்டாட அனைத்து வழிகாட்டுதல்களும், மாநிலத்தில் உள்ள அமைப்புகளுக்கு மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான திட்டங்கள் குறித்து மாநில அமைப்புகளுடன், ஊரக மேம்பாட்டுத்துறை செயலாளர் தலைமையில் காணொலி காட்சி ஆலோசனை கூட்டமும் கடந்த 7ம் தேதி நடத்தபட்டது. ஊட்டசத்து மாத தேசிய திட்டத்தின் படி, ஊட்டசத்து குறைபாடுடைய குழந்தைகளை கண்டறிதல் மற்றும் வீட்டு தோட்டம் அமைத்தலை ஊக்குவித்தல் போன்றவற்றுக்கு மாநில அமைப்புகள் கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
தேசிய ஊட்டசத்து மாத நிகழ்ச்சிகளில் சுய உதவிக் குழுக்கள் மற்றும் அவர்களின் கூட்டமைப்பினர் கொவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு தீவிரமாக பங்கேற்பது.
குழந்தைகளுக்கு தாய்பால் கொடுத்தல், துணை உணவுகள் அளித்தல், ஊட்டசத்து குறைபாடுடைய 2 வயதுக்கு உட்பட குழந்தைகளை அடையாளம் கண்டு எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
ஊட்டச்சத்து காய்கறி தோட்டங்களை அமைத்தல் மற்றும் மாநிலம் சம்பந்தப்பட்ட இதர பிரச்னைகள் குறித்து ஆராய குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தல்.
சுகாதாரத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை நடத்தும் இணைய கருத்தரங்குகளில் குழு பொறுப்பாளர்கள் பங்கேற்பது.
சுயஉதவிக் குழுவினரின் வீட்டில் தோட்டங்கள் அமைப்பதை ஊக்குவிப்பது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துடன் ஒருங்கிணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது.
இந்த நடவடிக்கைகளை மாநில அமைப்புகள் எடுத்து வருகின்றன.
தேசிய அமைப்பின் வழிகாட்டுதல்கள் மற்றும் உதவியுடன் மாநில அமைப்புகள், தேசிய ஊட்டச்சத்து மாத நிகழ்ச்சிகளில் கொவிட்-19 விதிமுறைகளுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்தாண்டு நடந்த ஊட்டசத்து மாத நிகழ்ச்சிகளில் 16.39 கோடி பேர் பங்கேற்றனர். மொத்தம் 11.39 லட்சம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1658595
----
(Release ID: 1658665)
Visitor Counter : 250