குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

மாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது: மாநிலங்களவை தலைவர் திரு வெங்கையா நாயுடு

Posted On: 23 SEP 2020 4:27PM by PIB Chennai

உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது மகிழ்ச்சியான விஷயம் இல்லை என்ற போதிலும், மாநிலங்களவையின் விதிகள், தரம் மற்றும் மதிப்பை காப்பாற்றும் கடமை தனக்கு உள்ளதாக மாநிலங்களவையின் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான திரு எம் வெங்கையா நாயுடு இன்று கூறினார்.

திட்டமிட்டதற்கு எட்டு நாட்களுக்கு முன்னதாகவே மாநிலங்களவை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டதையொட்டி நிறைவுரை ஆற்றிய திரு நாயுடு இவ்வாறு கூறினார்.

போராடுவது எதிர்க்கட்சிகளின் உரிமை என்று கூறிய மாநிலங்களவை தலைவர், ஆனால் அதை எப்படி செய்ய வேண்டும் என்று கேள்வி எழுவதாக கூறினார்.

உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது மகிழ்ச்சியான விஷயம் இல்லை என்ற போதிலும் அது தவிர்க்க முடியாதது என்று அவர் தெரிவித்தார்.

நீண்ட காலம் அவையை புறக்கணிப்பு செய்வதால் மற்ற உறுப்பினர்களால் தங்களது கருத்துக்களை எடுத்துரைக்க முடிவதில்லை என்று அவர் கூறினார்.

உறுப்பினர்களில் ஒரு பிரிவினர் புறக்கணிப்பு செய்தபோதும் மசோதாக்கள் அவையில் நிறைவேற்றப்பட்ட வரலாறு உள்ளது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

இந்தக் கூட்டத் தொடரின்போது மாநிலங்களவையின் செயல்திறன் 100.47 சதவீதமாக இருந்தது என்று திரு நாயுடு தெரிவித்தார்.


(Release ID: 1658334) Visitor Counter : 230