உள்துறை அமைச்சகம்

ஜம்மு-காஷ்மீரில் வாழ்விட சான்றிதழுக்காக விண்ணப்பித்தவர்கள் மற்றும் மத்திய ஆயுத காவல் படைகளில் கொவிட் பாதிப்புகள் பற்றிய தகவல்கள்

Posted On: 20 SEP 2020 5:08PM by PIB Chennai

மக்களவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்த  உள்துறை இணை அமைச்சர்கள் திரு ஜி கிஷன் ரெட்டியும், திரு நித்யானந்த் ராயும், கீழ்கண்ட தகவல்களை தெரிவித்தனர்:

ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு அளித்துள்ள தகவலின் படி 21,13,879 நபர்கள் வாழ்விட சான்றிதழுக்காக விண்ணப்பித்துள்ளனர்.

தேவையான ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்காததால் 1,21,630 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

16,79,520 நபர்களுக்கு ஜம்மு மற்றும் காஷ்மீர் நிர்வாகம் சான்றிதழ்களை வழங்கி உள்ளது.

மத்திய ஆயுத காவல் படைகளில் கொவிட் பாதிப்புகளை பொருத்தவரை, எல்லை பாதுகாப்பு படையில் 8934 பேர் பாதிக்கப்பட்டு, 80.41 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். இறப்பு விகிதம் 0.26 சதவீதம் ஆகும்.

மத்திய ரிசர்வ் காவல் படையில் 9158 பேர் பாதிக்கப்பட்டு, 84.04 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். இறப்பு விகிதம் 0.39 சதவீதம் ஆகும்.

கொவிட் மருத்துவமனைகள், கொவிட் நல மையங்கள், பிரத்தியேக சுகாதார மையங்கள் உள்ளிட்ட வசதிகளை மத்திய ஆயுத காவல் படைகளுக்காக அரசு செய்துள்ளது.

**

PIB/GB



(Release ID: 1657071) Visitor Counter : 230