சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவின் குணமடைந்தோர் வீதம் 78%-ஐ கடந்தது

Posted On: 15 SEP 2020 12:12PM by PIB Chennai

கொரோனா பாதிப்பிலிருந்து தினசரி குணமடைவோர் எண்ணிக்கை, நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கிறது.  குணமடைவோர் வீதம் இன்று 78.28%-ஐ கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 79,292 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 38,59,399 ஆக உள்ளது. குணமடைந்தோர் மற்றும் சிகிச்சை பெறுபவர்களுக்கான இடைவெளி இன்று 28 லட்சத்தைக் கடந்தது.

நாட்டில் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 9,90,061-ஆக உள்ளது.

சிகிச்சை பெறுபவர்களில் 48.8%  பேர் மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,054 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த இறப்பில் 69% பேர், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தில்லியைச்  சேர்ந்தவர்கள்.  

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1654383

*****


(Release ID: 1654452) Visitor Counter : 170