உள்துறை அமைச்சகம்

பத்ம விருதுகளுக்கான மனுக்களை 2020 செப்டம்பர் 15 வரை சமர்ப்பிக்கலாம்

Posted On: 14 SEP 2020 3:30PM by PIB Chennai

2021-ஆம் ஆண்டு குடியரசு தினத்தின் போது அறிவிக்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான மனுக்கள்/பரிந்துரைகளை நாளை (2020 செப்டம்பர் 15) வரை சமர்ப்பிக்கலாம்.

பத்ம விருதுகளுக்கான இணையதளத்தில்  (https://padmaawards.gov.in) மட்டுமே மனுக்கள்/பரிந்துரைகள் பெற்றுக் கொள்ளப்படும்.

பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் நாட்டின் பெருமைமிகு விருதுகள் ஆகும். 1954-இல் நிறுவப்பட்ட இந்த விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தின் போது அறிவிக்கப்படும்.

பல்வேறு துறைகளில் சிறந்த சேவைகளை ஆற்றி உள்ளவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1654017

 

****



(Release ID: 1654097) Visitor Counter : 130