திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

வேலையற்றவர்களுக்கு டிஜிட்டல் திறன்களை பயிற்றுவித்தல்

Posted On: 14 SEP 2020 2:30PM by PIB Chennai

இளைஞர்கள் திறமையோடு இருப்பதை உறுதி செய்வதற்கும், நான்காம் தொழில் புரட்சிக்கும், கொவிட்டுக்கு பிந்தைய காலத்தில் டிஜிட்டல் திறன்களைப் பெற்றிருப்பது அவசியமாகும்.

 

திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பயிற்சிகளின் தலைமை இயக்குநரகம், சமீபத்திய தொழில்நுட்பங்களுடன் கூடிய நீண்ட காலப் பயிற்சிகளை செயல்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.

 

வேலை தேடுபவர்களை அதிகமான எண்ணிக்கையில் சென்றடைவதற்கும், நாட்டில் உள்ள தொழில் முனைவோருக்கு புதிய வளங்களை அளிப்பதற்கும் ஜூன் 2020இல் ஐபிஎம் உடன் ஒரு ஒப்பந்தத்தில் இயக்குனரகம் கையெழுத்திட்டது.

 

இந்த இலவச டிஜிட்டல் கற்றல் தளத்தின் மூலம் வேலை தேடுவோரும் தொழில் முனைவோரும் இலவசமாக பயிற்சி பாடங்களை தரவிறக்கிக் கொள்ளலாம். மேலும் வழிகாட்டுதல் ஆலோசனைகளும் அவர்களுக்கு கிடைக்கும்.

 

இந்தத் தகவல்களை மத்திய திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல் அமைச்சர் திரு ஆர்கே சிங் எழுத்து மூலமான பதிலின் மூலம் மக்களவையில் இன்று அளித்தார்.

 

இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்த இணைப்பைப் பார்க்கவும்:

 

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1653983

 

***



(Release ID: 1654083) Visitor Counter : 106