சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் பெருந்தொற்று மற்றும் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சர் திரு ஹர்ஷ்வர்தன் மக்களவை/மாநிலங்களவையில் தாமாக முன் வந்து அளித்த அறிக்கை

Posted On: 14 SEP 2020 12:20PM by PIB Chennai

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு ஹர்ஷ்வர்தன், கொவிட் பெருந்தொற்று மற்றும் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து மக்களவை/மாநிலங்களவையில் தாமாக முன் வந்து அறிக்கை ஒன்றை இன்று சமர்ப்பித்தார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* 2020 செப்டம்பர் 11 வரை, 45,62,414 பாதிப்புகளும் 76.271 இறப்புகளும் இந்தியாவில் பதிவாகியுள்ளன (இறப்புகளின் விகிதம் 1.67%). 35,42,663 (77.65%) பேர் குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, உத்திரப் பிரதேசம், தில்லி, மேற்கு வங்கம், பீகார், தெலங்கானா, ஒடிஷா, அஸ்ஸாம், கேரளா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக அளவிலான பாதிப்புகளும், இறப்புகளும் பதிவாகியுள்ளன.

* கொவிட்-19 மேலாண்மைக்கான அரசு மற்றும் சமூக ரீதியான அணுகுமுறைகளைத் தொடர்ந்து, பத்து லட்சம் பாதிப்புகளில் உயிரழந்தோரின் எண்ணிக்கை 3,328 ஆகவும், பத்து லட்சம் மக்கள் தொகையில் உயிரழந்தோரின் எண்ணிக்கை 55 ஆகவும் உள்ளன. உலகளவில் குறைவான விகிதங்களில் இதுவும் ஒன்றாகும்.

* நாட்டில் பதிவாகியுள்ள பாதிப்புகளில் 92% பேருக்கு குறைவான அளிவிலேயே தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. வெறும் 5.8% பேருக்கும் மட்டுமே பிராண வாயு சிகிச்சை தேவைப்படுகிறது. 1.7% பேருக்கு மட்டுமே தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது.

* மிக அதிக அளவிலான உறுதியோடு இந்திய அரசு கொவிட்-19 சவாலை எதிர்கொண்டது. அரசின் துணிச்சலான முடிவான தேசிய அளவிலான பொது முடக்கத்தின் மூலம் இந்தியா ஒன்றிணைந்து பெருந்தொற்றை எதிர்கொண்டது. இதன் மூலம் சுமார் 14-29 லட்சம் பாதிப்புகளும், 37-78 ஆயிரம் இறப்புகளும் தவிர்க்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

* கடந்த நான்கு மாதங்கள் கூடுதல் சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும், மனித வளத்தை மேம்படுத்துவதற்கும், தனி நபர் பாதுகாப்பு உபகரணங்கள், என்-95 முகக்கவசங்கள் மற்றும் வெண்டிலேட்டர்கள் தயாரிப்புக்காகவும் பயன்படுத்தப்பட்டன.

* ஒட்டுமொத்த  நாட்டுமக்களின் சார்பாக, நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, சிறந்த தலைமையை வழங்கி வரும் மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடியை நான் பாராட்டுகிறேன்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1653947

******



(Release ID: 1653998) Visitor Counter : 221