சுற்றுலா அமைச்சகம்

நமது தேசத்தைப் பாருங்கள் வரிசையில் சுற்றுலா அமைச்சகம் வழங்கிய புதிய இணைய கருத்தரங்கம்- 'புத்தரின் காலடி சுவட்டில்'

Posted On: 14 SEP 2020 11:23AM by PIB Chennai

புத்த மதத்தோடு இந்தியா ஆழமான உறவைக் கொண்டுள்ளது. நாட்டின் மத்திய பகுதியில் இந்த மதத்தின் காலடிச் சுவடுகள் உலகப் புகழ் பெற்றவையாகும்.

புத்தமதத்தோடும் பகவான் புத்தரோடும் தொடர்புடைய இடங்கள் இந்தியாவில் ஏராளமாக உள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள புத்த மதத்தினர், புத்தரின் வாழ்க்கையோடும் கற்பித்தல்களோடும் தொடர்புடைய இந்த பகுதிகளைப் பார்ப்பதற்கு இயற்கையாகவே ஆர்வம் கொண்டுள்ளனர்.

நமது தேசத்தைப் பாருங்கள் - வரிசையின் கீழ் சுற்றுலா அமைச்சகம் 2020 செப்டம்பர் 12 அன்று ஏற்பாடு செய்த புதிய இணைய கருத்தரங்கமான- 'புத்தரின் காலடி சுவட்டில்', புத்தர் கண்டறிந்த உண்மைகளான துன்பத்தில் இருந்து வெளியில் வருதல் பற்றியும், தனிநபருக்கு மகிழ்ச்சியை உண்டாக்குவது குறித்தும் கவனம் செலுத்தியது.

புத்த வழி அகிம்சை அறக்கட்டளையின் நிறுவனரும் ஆசிரியருமான திரு தருமாச்சாரியா சாந்தம் இந்த இணைய கருத்தரங்கை வழங்கினார். புத்தரின் வாழ்க்கை பற்றியும் அரச குடும்பத்தை சேர்ந்தவரான புத்தர் துறவறம் மேற்கொண்டதைப் பற்றியும், அவர் தொடர்புடைய இடங்களைப் பற்றியும் இணைய கருத்தரங்கில் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும் : https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1653937

----- 



(Release ID: 1653957) Visitor Counter : 128