சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தேசிய மருத்துவ சிகிச்சை விதிமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை பின்பற்றுமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தல்

Posted On: 12 SEP 2020 4:49PM by PIB Chennai

இந்திய தொழில் மற்றும் வர்த்தக நிறுவன சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் புதுதில்லி எய்ம்ஸ்-உடன் இணைந்து, கொவிட்-19 சிகிச்சையை நாடு முழுவதும் அளித்து வரும் தனியார் மருத்துவமனைகளுக்கான மெய்நிகர் மாநாடு ஒன்றை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று நடத்தியது.

 

கொவிட்-19 மேலாண்மையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும், இழப்புகளை குறைப்பது பற்றியும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

 

இந்த மெய்நிகர் மாநாட்டின் போது, தேசிய மருத்துவ சிகிச்சை விதிமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வலியுறுத்தியது.

 

நோயாளிகளைத் தொடர்ந்து அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறும் தனியார் மருத்துவமனைகள் அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டன. மாநாட்டை துவக்கி வைத்துப் பேசிய மத்திய சுகாதார செயலாளர், படுக்கைகள் இல்லை என்று கூறி நோயாளிகளை திருப்பி அனுப்பக் கூடாது என்றும் சிறந்த மருத்துவ சிகிச்சையை வழங்க வேண்டும் என்றும் மருத்துவமனைகளைக் கேட்டுக்கொண்டார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1653604
 



(Release ID: 1653627) Visitor Counter : 159