குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

மதிப்பு சார்ந்த கல்வியை வழங்க குடியரசு துணைத் தலைவர் அறைகூவல்

प्रविष्टि तिथि: 11 SEP 2020 1:59PM by PIB Chennai

ஒரு தனிநபரின் முழுமையான வளர்ச்சிக்கு மதிப்பு சார்ந்த கல்வி வழங்கப்படுவது அவசியமென்று
குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று வலியுறுத்தினார்.

இந்தியா மற்றும் பூட்டானுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தகவல் மையம் மற்றும் ஸ்ரீ ராம் சந்திர மிஷன் இணைந்து நடத்திய 'ஹார்ட்ஃபுல்நெஸ் அகில இந்திய கட்டுரைப் போட்டியின்' இணைய வழியிலான தொடக்க விழாவில் பேசிய அவர், ஒரு நாட்டின் எதிர்காலம் இளைஞர்களால் வடிவமைக்கப்படுகிறது என்றார். 

இந்த தகவல் தொழில்நுட்ப யுகத்தில், சரியான மதிப்பு சார்ந்த விஷயங்களை இளைஞர்களிடத்தில் கொண்டு செல்வது இன்னும் அவசியமாகிறது என்று திரு நாயுடு கூறினார்.

கொவிட்-19 தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து பின்பற்றுமாறு மக்களைக் கேட்டுக்கொண்ட குடியரசு துணைத் தலைவர், பெருந்தொற்று காலத்தில் உதவி தேவைப்படுவோருக்கு தங்களால் இயன்றதை செய்யுமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

மற்றவர்களுக்காக நீங்கள் வாழும் போது அதிக காலம் வாழ்கிறார்கள் என்று அவர் கூறினார். கொரோனா வைரஸ் விரைவில் தோற்கடிக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

 https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1653272


(रिलीज़ आईडी: 1653340) आगंतुक पटल : 176
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Punjabi