குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக, கொவிட்-19 பரிசோதனையை செய்துகொண்டார் திரு வெங்கையா நாயுடு

Posted On: 11 SEP 2020 2:09PM by PIB Chennai

குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான திரு வெங்கையா நாயுடு, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்குவதை முன்னிட்டு கொவிட்-19 பரிசோதனையை செய்துகொண்டார்.

கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன் கொவிட் பரிசோதனையை செய்து கொள்வது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அவையில் கலந்து கொள்வதற்கு கொவிட் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்னும் பரிசோதனை அறிக்கையும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமில்லாமல், நாடாளுமன்ற அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கும் கொவிட் பரிசோதனையை செய்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 14, திங்கட்கிழமை அன்று தொடங்க உள்ள நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடருக்காக செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளை திரு எம் வெங்கையா நாயுடு இரு தினங்களுக்கு முன் ஆய்வு செய்தார்.

சமூக இடைவெளி விதிமுறைகளை பின்பற்றி செய்யப்பட்டுள்ள இருக்கை ஏற்பாடுகளோடு, செயலகத்தின் பணியாளர்களைக் கொண்டு திரு நாயுடு தலைமையில் மாதிரி நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது.  

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

 https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1653284



(Release ID: 1653338) Visitor Counter : 139