பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடெமியின் 61வது நிறுவன தினக் கொண்டாட்டத்தில் மத்திய அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் உரையாற்றினார்

Posted On: 10 SEP 2020 5:56PM by PIB Chennai

மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடெமியின் 61வது நிறுவன தினக் கொண்டாட்டத்தில் உரையாற்றினார்.

முதல் முறையாக, அரசின் 20 வெவ்வேறு துறைகளை உள்ளடக்கி "ஒருங்கிணைந்த" அடித்தள படிப்பை இந்த அகாடெமி நடத்தியது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், வருங்காலத்தில் இன்னும் அதிக துறைகள் ஒருங்கிணைக்கப்படும் என்றார்.

அனைத்து துறைகளிலும் உள்ள அலுவலர்கள் ஒரே லட்சியத்துடன் உழைக்க வேண்டும் என்னும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் எண்ணத்தை ஒட்டி இது செய்யப்படுவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடெமி என்பது நமது நாட்டில் மட்டுமில்லாமல், உலகின் முன்னணி பயிற்சி நிறுவனங்களில் ஒன்று என்று அமைச்சர் கூறினார். கடந்த ஆறு தசாப்தங்களாக இந்த நிறுவனம் ஆற்றிவரும் சேவைகளை அவர் பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1653048



(Release ID: 1653118) Visitor Counter : 105