சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் 73வது கூட்டத்தில், இப்பிராந்தியத்தில் கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து பணியாற்ற உறுப்பு நாடுகள் தீர்மானம் நிறைவேற்றின

Posted On: 10 SEP 2020 4:56PM by PIB Chennai

உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் 73வது கூட்டம், தாய்லாந்து துணை பிரதமரும் சுகாதார அமைச்சருமான திரு அனுடின் சார்ன்விரகுல் தலைமையில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள், தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து பணியாற்ற  தீர்மானம் நிறைவேற்றினர். 

மாநாட்டில் இந்தியாவின் சார்பாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர்
டாக்டர் ஹர்ஷ்வர்தன், காணொலி மூலம் கலந்து கொண்டு பேசினார்.

கொவிட்-19 அவசரகால தயார்நிலை குறித்த அமைச்சர்கள் அளவிலான வட்டமேசை கூட்டத்தில் பேசிய டாக்டர் ஹர்ஷ்வர்தன், இந்தியாவில் கொவிட்-19 மேலாண்மை மற்றும் 
கொவிட்-19 சாராத சிகிச்சைகளுக்கான நடைமுறைகள் எவ்வாறு பின்பற்றப்பட்டன என்பது குறித்து பேசினார். 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

 https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1653025


(Release ID: 1653106)