வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
அரியானாவில் ரூ.693 கோடி அம்ருத் திட்டங்கள் நிறைவு: ரூ.1,875 கோடி மதிப்பில் 73 திட்டங்கள் அமல்படுத்தப்படவுள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
10 SEP 2020 1:46PM by PIB Chennai
புத்துயிர் மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்கான அடல் திட்டத்தின் கீழ் (அம்ருத்) அரியானாவில் மேற்கொள்ளப்படும் 136 திட்டங்களின் நிலவரம் குறித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் திரு.துர்கா சங்கர் மிஸ்ரா தகவல் தெரிவிக்கப்பட்டது. ரூ.693 கோடியில் மேற்கொள்ளப்பட்ட 63 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. ரூ.1,875 கோடி மதிப்பில் 73 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநில ஆண்டு செயல் திட்டத்தின் கீழ், அரியானாவுக்கு அனுமதிக்கப்பட்ட மொத்த தொகை ரூ.2,566 கோடி.
ஆன்லைன் மூலம் நடந்த ஆய்வு கூட்டத்தில், பஞ்சாப், அரியானா மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேச மாநில மூத்த அதிகாரிகளை, திரு. திரு.துர்கா சங்கர் மிஸ்ரா பாராட்டினார். மாநிலங்களில் நடைபெறும் திட்டங்களை குறித்த நேரத்தில் விரைந்து முடிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார். மத்திய உதவியை பெற அனைத்து திட்டங்களையும் 2021 மார்ச் 31ம் தேதிக்கள் முடிக்கும்படி அவர் அறிவுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1652949
(வெளியீட்டு அடையாள எண்: 1653098)
வருகையாளர் எண்ணிக்கை : 141