சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் 73வது கூட்டத்தில் டாக்டர் ஹர்ஷ்வர்தன் பேசினார்

Posted On: 10 SEP 2020 3:11PM by PIB Chennai

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர்
டாக்டர் ஹர்ஷ்வர்தன், உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் 73வது கூட்டத்தில் காணொலி மூலம் இன்று பேசினார்.

கொவிட்-19 அவசரகால தயார்நிலை குறித்த அமைச்சர்கள் அளவிலான வட்டமேசை கூட்டத்தில் பேசிய டாக்டர் ஹர்ஷ்வர்தன், இந்தியாவில் கொவிட்-19 மேலாண்மை மற்றும் 
கொவிட்-19 சாராத சிகிச்சைகளுக்கான நடைமுறைகள் எவ்வாறு பின்பற்றப்பட்டன என்பது குறித்து பேசினார். 

கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளில் ஜனவரியில் இருந்தே அரசு ஈடுபட்டதாக கூறிய அமைச்சர், பயண அறிவுரைகள், தனிமைப்படுத்துதல் வசதிகள், சமூக அளவிலான கண்காணிப்பு பரிசோதனை ஆகியவற்றை குறித்து எடுத்துரைத்தார்.

கொவிட்-19 நோயாளிகளின் சிகிச்சைக்காக தேவைப்படும் தனியார் பாதுகாப்பு உபகரணங்கள், வெண்டிலேட்டர்கள் மற்றும் இதர மருத்துவ சாதனங்களின் உற்பத்தி அதிக அளவில் இந்தியாவிலேயே செய்யப்படுவதாக டாக்டர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1652976



(Release ID: 1653087) Visitor Counter : 192