உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
இயற்கை உணவு பதப்படுத்துதல் மையம் உத்திரப் பிரதேசத்தில் தொடங்கப்பட்டது, தமிழ்நாட்டில் 21 மையங்களுக்கு ஒப்புதல்
Posted On:
09 SEP 2020 11:23AM by PIB Chennai
உத்திரப் பிரதேசத்தில் புதிய இயற்கை உணவு பதப்படுத்துதல் மையத்தை தொடங்கி வைத்து பேசிய மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சர் திருமதி ஹர்சிம்ரத் கவுர் பாதல், இதன் மூலம் 5 ஆயிரம் விவசாயிகள் பலன் அடைவார்கள் என்றார்.
ரூபாய் 50.33 கோடி மதிப்பிலான மையத்தை திறந்து வைத்த அமைச்சர், உணவு பதப்படுத்துதல் துறை அதிவேக வளர்ச்சியை அடைந்து வருவதாகவும், முன்னணி துறைகளில் ஒன்றாக இந்திய அரசால் இது அடையாளப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
இத்தகைய மையங்கள் தற்சார்பு இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா திட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் என்று மத்திய அமைச்சர் மேலும் தெரிவித்தார். இந்தத் துறைக்கு அனைத்து உதவிகளையும் அழிக்க தன்னுடைய அமைச்சகம் உறுதி பூண்டுள்ளதாக திருமதி பாதல் கூறினார்.
இதற்கிடையே, உணவு பதப்படுத்துதல் துறை சார்ந்த வசதிகளுக்கு நாடு முழுவதும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் 71 மையங்களுக்கு அரசு 2020 ஆகஸ்டு 31 வரை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1652542
(Release ID: 1652606)
Visitor Counter : 161