பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

கட்டமைப்பு முதலீடு அறக்கட்டளை மூலம் இந்திய மின் பகிர்வு நிறுவனத்தின் (பவர்கிரிட்) துணை நிறுவனங்களின் சொத்துக்கள் மூலம் வருவாய் ஈட்டுவதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு(CCEA) ஒப்புதல்

Posted On: 08 SEP 2020 7:33PM by PIB Chennai

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நேற்று கூடியது. இதில் மின்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத் துறை நிறுவனமான, இந்திய மின்பகிர்வு நிறுவனத்தின்(பவர் கிரிட்) துணை நிறுவனங்களின் சொத்துக்களை, கட்டமைப்பு முதலீடு அறக்கட்டளை மூலம் பணமாக்கும் முக்கிய சீர்திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதுபுதிய மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்டுமான முதலீட்டு திட்டங்களுக்கு தேவையான நிதியைப் பெற, மின்துறையில் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனம், தனது துணை நிறுவனத்தின் சொத்துக்களை கட்டமைப்பு முதலீடு அறக்கட்டளை மூலம் பணமாக்குவது  இதுவே முதல் முறை.

 

இந்த அனுமதி மூலம் இந்திய மின்பகிர்வு நிறுவனம் தனது சொத்துக்கள் மூலம் ரூ.7000 கோடிக்கும் அதிகமான நிதியை திரட்ட முடியும்இந்த சொத்துக்கள் அனைத்தும், இந்திய மின் பகிர்வு நிறுவனத்தின் உயர் மின்னழுத்த வழித்தடங்கள் மற்றும் துணை மின்  நிலையங்கள் ஆகும் . இந்த சொத்து பணமாக்கலின் மூலம் கிடைக்கும் வருமானம், இந்திய மின்பகிர்வு நிறுவனத்தின் புதிய மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டங்களில் பயன்படுத்தப்படும்.

 

பின்னணி:

மின்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனம்பவர்கிரிட்’. இது தனது வர்த்தக செயல்பாட்டை  கடந்த 1992-93ம் ஆண்டில் தொடங்கியது. தற்போது மின் பகிர்வில் முன்னணி நிறுவனமாக உள்ளது. இது தனது துணை நிறுவனங்களுடன் கட்டண அடிப்படையிலான  போட்டி ஏல முறையில், நாட்டின் பல இடங்களில் மின் பகிர்வு நிறுவனங்களை வைத்துள்ளது. இந்நிறுவனம், தனது முதலீட்டுக்கு தேவையான நிதியை, தனக்குள்ள சொத்துக்கள் மற்றும் கடன் மூலமாக திரட்டிக் கொள்கிறது.

முதல்கட்டமாக இந்திய மின்பகிர்வு நிறுவனம் தனது சொத்துக்கள் மூலம் ரூ.7 ஆயிரம் கோடி நிதி திரட்டும். இதன் மூலம் கிடைக்கும் அனுபவம் மூலம், எதிர்காலத்தில், பணமாக்குதலுக்கான நடவடிக்கைகள் மேலும் மேற்கொள்ளப்படும்.

சொத்து மறுசுழற்சி என்பது முதலீட்டுக்கு தேவையான நிதியை பெறுவதற்கான மத்திய அரசின் முக்கியமான உக்தி. கட்டுமான முதலீட்டு அறக்கட்டளையின் இந்த திட்டம் உள்நாடு மற்றும் அன்னிய முதலீடுகளை ஈர்க்கும்.



(Release ID: 1652566) Visitor Counter : 180