நித்தி ஆயோக்

ஏஐஎம் புது நிறுவன கண்டுபிடிப்பாளர்களுக்கு அதிகாரமளிக்க ப்ரெஷ்வொர்க்சுடன் அடல் இன்னொவெஷன் மிஷன் கூட்டு சேர்கிறது

Posted On: 07 SEP 2020 2:25PM by PIB Chennai

இந்தியாவில் உள்ள கண்டுபிடிப்பாளர்களுக்கும், தொழில்முனைவோருக்கும் வலுவான ஆதரவை அளிப்பதற்காக, நிதி ஆயோக்கின் அடல் இன்னொவெஷன் மிஷன் (ஏஐஎம்), வாடிக்கையாளர் ஈடுபாடு மென்பொருள் நிறுவனமான ப்ரெஷ்வொர்க்சுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

 

ஏஐஎம் பட்டியலில் உள்ள நிறுவனங்கள் மற்றும் புது நிறுவனங்களின் (ஸ்டார்ட் அப்) திறனை அதிகரிப்பதையும், புதுநிறுவன கண்டுபிடிப்பாளர்களிடையே புதுமையையும், தொழில்முனைதலையும் ஊக்குவிப்பதையும், இந்தக் கூட்டு, லட்சியமாகக் கொண்டுள்ளது.

 

இந்தக் கூட்டின் கீழ், ஏஐஎம் மற்றும் அதன் பயனாளிகளுக்கு தனது பொருள்களின் பலனை ப்ரெஷ்வொர்க்ஸ் அளிக்கும். இதன் மூலம், புது நிறுவனங்கள் தங்களது செலவுகளைக் கட்டுப்படுத்தி சிறப்பாக செயலாற்ற முடியும்.

 

ஏஐஎம் இயக்க இயக்குநர் திரு ஆர் ரமணன் கூறுகையில், "புதுமைகளைப் படைக்கும் தங்களது பயணத்தில் பயிற்சியாளர்களுக்கும், புது நிறுவனங்களுக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். ப்ரெஷ்வொர்க்சுடன் கூட்டு சேர்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். நாடு முழுவதுமுள்ள புது நிறுவனங்களின் திறனை அதிகரிப்பதும், அவற்றை நீடித்து நிலைக்க செய்வதும் தான் எங்களது முதன்மை நோக்கமாகும்," என்றார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1651946

 

***********



(Release ID: 1651989) Visitor Counter : 181