குடியரசுத் தலைவர் செயலகம்
தேசிய கல்விக் கொள்கை 21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கேற்ப இந்தியாவை வழிநடத்திச் செல்லும்: குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த்
Posted On:
07 SEP 2020 2:15PM by PIB Chennai
தேசிய கல்விக் கொள்கை குறித்த மெய்நிகர் மாநாட்டில் இன்று கலந்து கொண்ட குடியரசு தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், பிரதமர் திரு நரேந்திர மோடி, மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், நிர்வாகிகள் மற்றும் மாநில / யூனியன் பிரதேச கல்வி அமைச்சர்கள், இந்தக் கொள்கை வெறும் ஆவணம் மட்டுமல்ல, நாட்டின் குறிக்கோள்களை அடைவதற்கான முயற்சி என்று தெரிவித்தனர்.
மாநாட்டில் பேசிய, குடியரசு தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், தேசிய கல்வி கொள்கை 21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கேற்ப இந்தியாவை வழிநடத்தி செல்லும் என்று தெரிவித்தார்.
"தேசிய கல்வி கொள்கை 2020-ஐ மாநிலங்களில் அமல்படுத்துவதற்கு, அதை சார்ந்த மெய்நிகர் மாநாடுகளை நடத்த ஆளுநர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். புதிய கல்வி கொள்கையின் பல்வேறு கூறுகளைப் பற்றி விரிவாக ஆலோசித்த பிறகு, ஆலோசனைகளை கல்வி அமைச்சகத்துக்கு அனுப்பலாம்," என்று திரு கோவிந்த் தெரிவித்தார்.
இந்திய மொழிகள், கலை மற்றும் கலாச்சாரத்துக்கு தேசிய கல்வி கொள்கை 2020-இல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறிய குடியரசு தலைவர், படைப்பாற்றலை மாணவர்களிடயே இது மேம்படுத்தில், இந்திய மொழிகளையும், இந்திய ஒற்றுமையையும் வலுப்படுத்தும் என்றார்.
தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் ஒருங்கிணைத்தல் மூலம் கற்றல் செயல்பாட்டை மேம்படுத்தி சிறந்த விளைவுகள் எட்டப்பட வேண்டும். இதற்காக, தேசிய கல்வி கொள்கை பேரவை உருவாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்திய இளைஞர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை பூர்த்தி செய்ய தேசிய கல்வி கொள்கை உதவும் என்றும் 21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப அது செயல்படுத்தப்படும் என்றும் குடியரசு தலைவர் மேலும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1651942
***********
(Release ID: 1651985)
Visitor Counter : 226
Read this release in:
Punjabi
,
Marathi
,
Telugu
,
Manipuri
,
English
,
Urdu
,
Hindi
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Malayalam