சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மொத்த குணமடைதல் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரிப்பு, 32.5 லட்சத்தை இன்று கடந்தது

Posted On: 07 SEP 2020 12:04PM by PIB Chennai

நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவைரஸ் பாதிப்புகளில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை, 32.5 லட்சத்தை இன்று கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 69,564 நோயாளிகள் குணமடைந்த நிலையில், குணமடைதல் விகிதம் 77.31 சதவீதத்தை தொட்டது.

 

பரிசோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சை என்னும் யுக்தியின் கீழ் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, பாதிப்புகள் விரைவில் கண்டறியப்பட்டு வருகின்றன.

 

இந்த செயல்பாடுகளின் மூலம் இறப்பு விகிதமும் குறைந்து, 1.70 சதவீதமாக தற்போது உள்ளது. நாட்டின் 60 சதவீதம் மொத்த பாதிப்புகள் ஐந்து மாநிலங்களில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் விவரம்: மகாராஷ்டிரா (21.6%), ஆந்திரப் பிரதேசம் (11.8%), தமிழ்நாடு (11.0%), கர்நாடகா (9.5%) மற்றும் உத்திரப் பிரதேசம் (6.3%).

 

அதிக தற்போதைய பாதிப்புகளின் எண்ணிக்கையும் இதே மாநிலங்களில் தான் உள்ளது: மகாராஷ்டிரா (26.76%), ஆந்திரப் பிரதேசம் (11.30%), கர்நாடகா (11.25%), உத்திரப் பிரதேசம் (11.25%) மற்றும் தமிழ் நாடு (5.83%).

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும் : https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1651925

 

-------


(Release ID: 1651967)