சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
70,000-க்கும் அதிகமான நோயாளிகள் ஒரே நாளில் குணமடைந்த நிலையில், இந்தியாவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31 லட்சத்தை கடந்தது
प्रविष्टि तिथि:
05 SEP 2020 6:02PM by PIB Chennai
இந்தியாவின் 'பரிசோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சை' யுக்தி சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இல்லாத அளவில் 70,000-க்கும் அதிகமான நோயாளிகள் ஒரே நாளில் குணமடைந்த நிலையில், நாட்டில் மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்தைக் கடந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் 70,072 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைதல் விகிதம் தற்போது 77.23 சதவீதமக உள்ளது. இதனால் இறப்பு விகிதமும் குறைந்து 1.73 சதவீதமாக இன்று உள்ளது.
தற்போது சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கையுடன் (8,46,396) ஒப்பிடும் போது, 22.6 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் குணமடைந்துள்ளனர். தொற்று உறுதி செய்யப்பட்ட மொத்த நபர்களில் வெறும் 21.04 சதவீதம் பேர் தான் தற்போது சிகிச்சையில் உள்ளார்கள்.
ஐந்து மாநிலங்கள் அதிக குணமடைதல்களைக் கண்டுள்ளன. அறுபது சதவீத குணமடைதல்கள் இம்மாநிலங்களில் இருந்து வந்துள்ளன. இதன் விவரம் வருமாறு: மகாராஷ்டிரா (21%), தமிழ்நாடு (12.63%), ஆந்திரப் பிரதேசம் (11.91%), கர்நாடகா (8.82%) மற்றும் உத்திரப்பிரதேசம் (6.14%).
மேலும் விவரங்களுக்கு, இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1651600
(रिलीज़ आईडी: 1651919)
आगंतुक पटल : 202