ரெயில்வே அமைச்சகம்

80 சிறப்பு ரயில்களை 12 செப்டம்பர் முதல் இயக்க இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளது

Posted On: 05 SEP 2020 9:48PM by PIB Chennai

சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்திய ரயில்வே அமைச்சகம், 12 செப்டம்பர் 2020 முதல் 80 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு எடுத்துள்ளது.

முழுக்க முன்பதிவு முறையில் இயங்கும் இந்த ரயில்களுக்கான முன்பதிவு 10 செப்டம்பர் அன்று தொடங்கும்.

ஏற்கனவே இயக்கப்பட்டு கொண்டிருக்கும் 30 ராஜதானி சிறப்பு ரயில்கள் மற்றும் 200 சிறப்பு மெயில் விரைவு வண்டிகளுடன் கூடுதலாக இந்த 80 (40 ஜோடி) ரயில்கள் இயக்கப்படும்.

12.05.2020-இல் இருந்து 30 ராஜதானி சிறப்பு ரயில்களையும், 01.06.2020-இல் இருந்து 200 சிறப்பு மெயில் விரைவு வண்டிகளையும் (மொத்தம் 230 ரயில்கள்) இந்திய ரயில்வே இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1651686
 


(Release ID: 1651917) Visitor Counter : 309