சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

அதிக அளவிலான கொரோனா பாதிப்புகளை கண்டு வரும் ஆறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை செயலாளர்களோடு மத்திய சுகாதாரச் செயலாளர் ஆலோசனை நடத்தினார்

Posted On: 06 SEP 2020 11:34AM by PIB Chennai

கோவிட் பாதிப்புகளும், இறப்பு விகிதங்களும் அதிகரித்து வரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகங்களோடு மத்திய சுகாதார அமைச்சகம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.

 

இதன் தொடர்ச்சியாக, அதிக அளவிலான கொரோனா பாதிப்புகளைக் கண்டு வரும் ஐந்து மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தின் சுகாதாரச் செயலாளர்களோடு மத்திய சுகாதாரச் செயலாளர் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.

 

பெருந்தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, குஜராத் புதுச்சேரி, ஜார்க்கண்ட் மற்றும் தில்லியில் உள்ள 35 மாவட்டங்களைப் பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

 

மாநில சுகாதாரச் செயலாளர்களுடன், தொடர்புடைய மாவட்ட ஆட்சித் தலைவர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் இதர அதிகாரிகளும் மத்திய சுகாதாரச் செயலாளருடனான இந்த காணொளிக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

 

 

மேலும் விவரங்களுக்கு, இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1651732



(Release ID: 1651768) Visitor Counter : 170