ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஸ்டார்ட்-அப் கிராமத் தொழில்முனைவோர் திட்டம் (SVEP) ஊரகப் பகுதிகளில் தொழில் நிறுவனங்களை ஊக்குவித்து, ஊரகத் தொழில் முனைவோரை உருவாக்குகிறது

Posted On: 05 SEP 2020 1:07PM by PIB Chennai

தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (DAY-NRLM) துணைத் திட்டமாக ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் 2016 முதல் ஸ்டார்ட்-அப் கிராமத் தொழில்முனைவோர் திட்டம் (SVEP) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

ஊரகப் பகுதிகளில் தொழில் நிறுவனங்கங்களை ஊக்குவித்து, ஊரகத் தொழில் முனைவோரை உருவாக்குவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். நிதி, வழிகாட்டுதல் மற்றும் திறன் சூழலியல் ஆகிய ஊரகப் புது நிறுவனங்களின் மூன்று முக்கியத் தேவைகளை ஸ்டார்ட்-அப் கிராமத் தொழில்முனைவோர் திட்டம் நிறைவேற்றுகிறது.

 

ஏழ்மையில் இருந்து கிராமப்புற மக்களை மீட்கும் லட்சியத்தோடு, அவர்கள் சொந்தத் தொழில் நிறுவனங்களைத் தொடங்கி நடத்த இந்தத் திட்டம் உதவி செய்கிறது. நிதி உதவி, தொழில் மேலாண்மைப் பயிற்சி மற்றும் திறன் வளர்த்தல் ஆகியவற்றை இத்திட்டம் வழங்குகிறது.

 

இது வரை 23 மாநிலங்களில் உள்ள 153 வட்டங்களில் வர்த்தக ஆதரவு சேவைகள் மற்றும் மூலதன உதவியை வழங்கியுள்ள ஸ்டார்ட்-அப் கிராமத் தொழில்முனைவோர் திட்டம், ஆகஸ்ட் 2020 வரை ஒரு லட்சம் நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்துள்ளது. இதில் 75 சதவீதம் பெண்களால் நடத்தப்படுபவை ஆகும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்


https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1651525

 


***
 (Release ID: 1651617) Visitor Counter : 293