நிதி ஆணையம்

15-வது நிதி ஆணையம் அதன் பொருளாதார ஆலோசனைக் குழுவுடன் இணையம் மூலம் கூட்டம் நடத்தியது

Posted On: 04 SEP 2020 5:59PM by PIB Chennai

பதினைந்தாவது நிதி ஆணையம் அதன் பொருளாதார ஆலோசனைக் குழுவுடனும் சிறப்பு அழைப்பாளர்களுடனும் இணைய வழியிலான கூட்டமொன்றை 4 செப்டம்பர் 2020 அன்று நடத்தியது

 

ஆணையம் கையாள வேண்டியுள்ள பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பதினைந்தாவது நிதி ஆணையத்தின் தலைவர் திரு என் கே சிங் மற்றும் உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

 

மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் மீதான இறுதி ஆலோசனை, மத்திய அரசு மற்றும் மாநிலங்களின் வரி நிலைமை, சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு, வருவாய்ப் பற்றக்குறை மானியம் மற்றும் நிதி ஒருங்கிணைப்பு ஆகியவற்றை குறித்து இந்தக் கூட்டம் விவாதித்தது

 

டாக்டர் அர்விந்த் விர்மானி, டாக்டர் இந்திரா ராஜாராமன், டாக்டர் .டி. கே ஸ்ரீவத்ஸவா, டாக்டர் எம் கோவிந்த ராவ், டாக்டர் சுதிப்தோ முண்ட்லே, டாக்டர் ஓம்கார் கோசுவாமி, டாக்டர் கிருஷ்ணமூர்த்தி

சுப்பிரமணியன், டாக்டர் புரொனாப் சென் மற்றூம் டாக்டர் சங்கர் ஆச்சார்யா உள்ளிட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்க்ளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

 

நிதி ஆணையம் இது வரை இல்லாத அளவுக்கு நிச்சயமற்றத் தன்மையை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்த ஆலோசனைக் குழு, வரிகளையும் இதர விஷயங்களையும் மிகவும் கவனமாகக் கையாளும் படி ஆணையத்தை கேட்டுக்கொண்டது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1651350

 


(Release ID: 1651535)