ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

ஹால்டியா துறைமுகத்துக்கு கப்பல் மூலம் 560 மெட்ரிக் டன் அம்மோனியம் சல்பேட்டை இன்னொமொரு 20 கலன்களில் பாக்ட் அனுப்புகிறது

Posted On: 04 SEP 2020 4:07PM by PIB Chennai

மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத் துறை நிறுவனமான பெர்டிலைசர்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் (FACT), தனது பொருட்களை எடுத்து செல்வதற்கான செயல்மிகு முறையாக கப்பல் போக்குவரத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

 

நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு துரிதமாக மற்றும் சரியான நேரத்தில் உரங்கள் சென்றடைவதை இது உறுதி செய்யும்.

 

இந்த முயற்சியில் கொச்சின் துறைமுக பொறுப்புக் கழகத்தின் செயல்மிகு ஆதரவு ஃபாக்டுக்கு கிடைத்துள்ளது. ஹால்டியா துறைமுகத்துக்கு கப்பல் மூலம் 20 களன்களில் அம்மோனியம் சல்பேட்டை 30 ஜூலை, 2020 அன்று பாக்ட் அனுப்பியது.

இதைத் தொடர்ந்து, ஹால்டியா துறைமுகத்துக்கு கப்பல் மூலம் 560 மெட்ரிக் டன் அம்மோனியம் சல்பேட்டை இன்னொமொரு 20 கலன்களில் பாக்ட் அனுப்புகிறது

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1651281


(Release ID: 1651353) Visitor Counter : 161