ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
மக்கள் மருந்தகங்களின் மூலம் விற்பனை செய்வதற்காக 8 நோய் எதிர்ப்பு சக்திப் பொருட்களை திரு சதானந்த கவுடா அறிமுகப்படுத்தினார்
प्रविष्टि तिथि:
03 SEP 2020 4:48PM by PIB Chennai
பிரதமரின் இந்திய மக்கள் மருந்தக திட்டத்தின் கீழ் மக்கள் மருந்தகங்களின் மூலம் விற்பனை செய்வதற்காக 8 நோய் எதிர்ப்பு சக்திப் பொருட்களை மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு சதானந்த கவுடா இன்று அறிமுகப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு கவுடா, கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக, இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சத்து பொருட்கள் முக்கியத்துவம் பெறுவதாகக் குறிப்பிட்டார். இந்த பொருட்கள் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.
தரத்தில் சிறந்த இந்தப் பொருட்கள், சந்தை விலையுடன் ஒப்பிடும் போது 26 சதவீதம் விலை குறைவாகக் கிடைக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார். மக்கள் மருந்தகங்களின் வலுவான வலைப்பின்னலின் மூலம் இந்தப் பொருட்கள் மக்களை பெரிய அளவில் சென்றடைந்து அவர்களுக்கு பலனளிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1651037
***
MBS/GB
(रिलीज़ आईडी: 1651074)
आगंतुक पटल : 423