பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

2020 செப்டம்பர் 3 மற்றும் 4 ம் தேதிகளில் நடைபெறவுள்ள இரன்டு நாள் நிகர்நிலை தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி மாநாட்டை மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா நாளை தொடங்கி வைக்கிறார்

Posted On: 02 SEP 2020 6:35PM by PIB Chennai

2020 செப்டம்பர் 3 மற்றும் 4 ம் தேதிகளில் நடைபெறவுள்ள இரண்டு நாள் நிகர்நிலை தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி மாநாட்டை மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா நாளை தொடங்கி வைக்கிறார்.

இந்த மாநாட்டிற்கு மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சகமும், பொது நிர்வாகத்திற்கான இந்திய நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. மத்திய பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் திருமதி ரேணுகா சிங் சாருதா மாநாட்டில் பங்கேற்போரிடையே உரையாற்ற உள்ளார். இந்த வகையில் நடைபெறும் இரண்டாவது மாநாடு இது ஆகும். இத்தகைய முதலாவது மாநாடு 2020 ஜனவரியில் நடைபெற்றது.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1650712 என்ற வலை தளத்தைப் பார்க்கவும்

                                                                     ------


(Release ID: 1651038) Visitor Counter : 163